Sunday 5th of May 2024 09:16:07 AM GMT

LANGUAGE - TAMIL
ஈ-சிகரெட் பாவனை, விற்பனைக்கு கனடாவில் வலுக்கிறது எதிர்ப்பு!

ஈ-சிகரெட் பாவனை, விற்பனைக்கு கனடாவில் வலுக்கிறது எதிர்ப்பு!


2020 ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஈ-சிகரெட் விற்பனை மற்றும் பாவனைக்கு கனடாவின் நோவா ஸ்கோடியாவில் தடை விதிக்கப்படும் என அம்மாகாண அரசு அறிவித்துள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்பு, ஒன்ராறியோ நகராட்சிகளான பிராம்ப்டன் மற்றும் மிசிசாகா ஆகியவை பொது இடங்களில் புகைத்தலுக்கான தடையை அறிவித்தன.

பிற நகரங்களும் மாகாணங்களும் அவற்றின் தடைகளையும் புதிய விதிகளையும் பரிசீலித்து வருகின்றன.

எனினும் கனடாவில் ஏனைய பல இடங்களில் தொடர்ந்தும் ஈ-சிகரெட் பாவனைக்கு சட்டரீதியாக அங்கீகாரம் உள்ளதால் இந்த விடயத்தில் குழப்பங்கள் நீடிக்கின்றன.

மில்லியன் கணக்கான குழந்தைகளின் பாதுகாப்பற்ற சூழலுக்கு ஈ-சிகரெட் புகைத்தல் வழிவகுக்கும் என கனேடியர்கள் பலர் அச்சம் வெளியிடப்பட்டுள்ளனர்.

கனடா சுகாதார துறையும் மத்திய அரசாங்கமும் ஈ-சிகரெட் பாவனை குறித்து இதுவரை தீர்க்கமான முடிவொன்றை எடுக்கவில்லை.

ஈ-சிகரெட் பாவனையால் கனடாவில் பலர் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதுகாப்பானவை இல்லை என்று தோன்றும் ஈ-சிகரெட் தயாரிப்புகளை கனடா ஏன் நாட்டுக்குள் அனுமதித்தது? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த தயாரிப்புகள் ஏன் அனுமதிக்கப்பட்டன? அதனைக் கண்டுபிடிப்பதற்கும் அவசரமாகச் செயல்பட கனடா சுகாதார துறைக்கு அரசியல்வாதிகள் அழுத்தம் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

நவம்பரில் முன்னெடுக்கப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் நான்கு கனேடியர்களில் மூன்று பேர் ஈ-சிகரெட்டுகளை விற்பனை செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் தடை விதிக்க ஆதரவளித்தனர்.

ஆல்பர்ட்டாவில் 71 வீதம் மக்களும் அட்லாண்டிக் கனடாவில் 77வீதம் பேரும் ஈ-சிகரெட் புகைத்தல் பொருட்களுக்கும் தற்காலிக தடை விதிக்கப்படுவதற்கான ஆதரவை அளித்துள்ளது இந்த கருத்துக் கணிப்பு முடிவில் தெரியவந்துள்ளது.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE